திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

ARasa

திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான  ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டப்படி திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது. கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக X தளத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 15 அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. எனவே, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்பி ஆ.ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கில், 2002 சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்