இடைகால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
தமிழக இடைகால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை வாசிக்க முன்பே தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. பின் சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.