தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக தயாா் : எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின்.! காரணம் என்ன ?
தமிழகத்தின் எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காவிடில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினா்கள் கூண்டோடு பதவி விலக தயாராக இருப்பதாக தொிவித்துள்ளாா்.
காவிாி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு பதிலையும், கா்நாடகத்திற்கு ஒரு பதிலையும் தொிவித்து வருகிறது.இது குறித்து கர்நாடகாவில் அனனத்து கட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தொிவித்தன.
மேலும் கடந்த 22ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டு 3 முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்த தீா்மானங்கள் மீதும் மத்திய அரசு செவி சாய்ப்பதாக தொியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னா் மத்திய நீா்வளத்துறை அமைச்சகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை தொிவிக்கவில்லை.
எதிா்க்கட்சி தலைவா் ஸ்டாலின் காவிாி விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் பதவி விலகி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தொிவித்தாா். ஆனால் இதற்கு அ.தி.மு.க. எதிா்ப்பு தொிவித்தது.
இந்நிலையில், காவிாி மேலாண்மை வாாியம் தொடா்பான சிறப்பு கூட்டம் தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேலாண்மை வாாியம் அமைக்கப்படவில்லை என்றால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தாா். தொடா்ந்து மேலாண்மை வாாியம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
DMK MLAs to resign: Dayan Stalin What is the reason?