நாளை ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டபேரவை கூட்டம் நாளை (மார்ச் 9 ஆம் தேதி) மீண்டும் கூடுகிறது.கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.