உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவர் குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.
திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை அதிகளவில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் இளம்பெண் கூறிய புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை அண்மையில் நீ்லாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர். இருவரும் வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை மறைமுகமாக தொடங்கிய தேமுதிக..?
இதற்கிடையில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் ஜாமின் கோரிய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக ஊடக அழுத்தம் காரணமாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இருவரையும் போலீசார் காவலில் விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும். மேலும் போக்ஸோ வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் சென்னை முதன்மை நீதிமன்றம் பல்லாவரம் எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்தது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…