#BREAKING : திமுக எம்.எல்.ஏ மகன் உயிரிழப்பு ..!
சென்னை முன்னாள் மேயர் & சட்டமன்ற உறுப்பினர் மா சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பு இருந்தது. பின்னர், அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
சுப்பிரமணியனின் இளையமகன் அன்பழகன் (34) கொரோனா பாதித்த நிலையில் சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அன்பழகன் இன்று உயிரிழந்தார்.