#BREAKING: திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – கொறடா அறிவிப்பு ..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 18ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், மார்ச் 18ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 18ம் தேதி -ஆம் தேதி சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தான் வேளாண் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்வது குறித்து முழு தகவலும் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முதல்முறையாக வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2022-23 க்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025