சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார்.
பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி முதலுதவி அளித்துள்ளார். அப்போது காயத்திற்கு கட்டு போடுவதற்கு துணி ஏதும் இல்லாததால், மாற்று துணியாக தனது காரில் வைத்திருந்த வேஷ்டியை கிழித்து அந்த இளைஞருக்கு கட்டு போட்டுள்ளார்.
இதன் பின்னர், அவ்விடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவைத்து அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னரே அங்கிருந்து மருத்துவரான எம்.எல்.ஏ. லட்சுமணன் புறப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த எலும்பு முறிவு மருத்துவர்களில் திமுக எம்.எல்.ஏ. லட்சுமணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…