ஆம்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வின் செருப்பை, அவரது கட்சியைச் சேர்ந்த தலித் நிர்வாகி ஒருவர் கையில் துாக்கி சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி இந்த கிராமத்தில் தற்போது கனமழை செய்த காரணத்தால் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிடதி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன், கடந்த 30ம் தேதி அங்கு சென்றார்.
இந்நிலையில் பாதையானது சேறும், சகதியுமாக இருந்த காரணத்தால், தன் செருப்பை கழற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து சென்றுள்ளார். வெங்கடசமுத்திரம் ஊராட்சியின் தி.மு.க செயலராக இருப்பவர் சங்கர், இவர் எம்.எல்.ஏவின் செருப்பை தனது கையில் துாக்கியப் படியே உடன் செல்கிறார்.இவர்களுடன் மேலும் சிலரும் செல்கின்றனர்.இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வேகமாக சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
தலித் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகியை, செருப்பை துாக்கி வரச்சொல்வதா? என்று சமூக நீதி பேசுகின்ற தி.மு.கவின் உண்மையான முகம் இதுதானா? என்று விமர்சனங்கள் வலைதளங்களில் கடுமையாக எழுகின்றன.
இவ்வாறு சர்ச்சை வெடிக்கவே செருப்பை தூக்கிய நடந்தாக கூறப்படும் தி.மு.க ஊராட்சி செயலர் சங்கர் கூறுகையில் பேரணாம் பட்டு தெற்கு ஒன்றியச் செயலராக வில்வநாதன் இருக்கிறார். என் மனைவி அனிதா ஒன்றிய துணைச் செயலராக இருக்கிறார்.
இதனால் எப்போதுமே எம்.எல்.ஏ., உடன்தான் நான் இருப்பேன். தடுப்பணையை பார்க்கச் சென்றபோது பாதை சேறும் சகதியுமாக இருந்த காரணத்தால், செருப்பை ஓரமாக கழற்றி போட்டு, வேட்டியை துாக்கி பிடித்தபடி சென்றார்.
பாதையில் முட்கள் இருந்ததால், நான்தான், எம்.எல்.ஏவின் செருப்பை எடுத்து வந்தேன் என்று கூறியுள்ளார்.மேலும் இவ்விவகாரத்தில் அவர் கூறும் போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த என்னை பகடைக்காயாக வைத்து, எம்.எல்.ஏவின் வளர்ச்சியை தடுக்க சதி செய்கின்றனர் என்று கூறினார்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ., வில்வநாதன் கூறுகையில் நான் ஊராட்சி தலைவராக இருந்த காலம் முதல், இப்போது வரை யாரிடமும் ஜாதி பார்த்து பழகியது கிடையாது. என் வளர்ச்சியை பிடிக்காத யாரோ சிலர் பிரச்னையை பெரிதுபடுத்த பார்க்கின்றனர் என்று கூறுனார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…