#BREAKING: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா.!
ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து , கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வசந்தம் கார்த்திகேயனின் குடும்பத்தில் ஏற்கெனவே 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கொரோனாவால் திமுக எம்எல்ஏ அன்பழகன் உயிரிழந்த நிலையில், இன்று திமுக முன்னாள் வடசென்னை மாவட்ட செயலாளர் பலராமன் உயிரிழந்துள்ளார்.