செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த 31-ஆம் தேதி சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தினர்.
மேலும் செந்தில் பாலாஜியின் ஜவுளி ஏற்றுமதி அலுவலகம் மற்றும் அவரின் தம்பி அசோக் வீட்டிலும் வீட்டில் சோதனை நடத்தி நடத்தினர். இதற்கு இடையில் மத்திய குற்றபிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில்,செந்தில் பாலாஜி தற்போது தலைமைறைவாக உள்ளார்.நோட்டீஸ் கொடுக்க பலமுறை முயற்சி செய்தும்,கொடுக்க முடியவில்லை.இதற்கு நீதிமன்றம் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பும் நடைமுறையை மேற்கொள்ள அறிவுறுத்தியது.மேலும் விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பும் வரை செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.ஓரிரு நாளில் முன் ஜாமின் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று வழக்கை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…