தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்,கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவரின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அதனைதொடர்ந்து, தற்பொழுது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று விசாரித்தார். மேலும், அவரின் உடல்நிலை குறித்து முதல்வர் பழனிச்சாமியும் விசாரித்தும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…