கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ அன்பழகன்! உடல்நலம் குறித்து விசாரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
முதல்வர் பழனிசாமி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார்.
நேற்று முன்தினம், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு 67% ஆக்சிஜன் மட்டுமே தேவை என்றும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். மேலும் அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.