ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவன் தான் காரணம் : எடப்பாடி பழனிசாமி ..!

Published by
Dinasuvadu desk

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதாஜீவனே காரணம் என்று   சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, நடைபெற்ற சம்பவங்கள் குறித்த விளக்க அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர், பேசிய அவர் தடுப்புகளை மீறி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் கூடிய புகைப்படத்தை, சட்டப்பேரவையில் காண்பித்தார்.

அதேபோல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம், பேருந்துகளுக்கு தீவைப்பு தொடர்பான புகைப்படங்களையும் காண்பித்த அவர், ஸ்டெர்லைட் கலவரத்துக்கு திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். போராட்டத்தில் சில அரசியல் கட்சியினர் ஊடுருவியதாக கூறியது திமுகவினரைத் தான் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவே காரணம் என குற்றஞ்சாட்டிய முதலமைச்சர், திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாகவும் விமர்சித்தார்.

Recent Posts

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

2 mins ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

1 hour ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

2 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

2 hours ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

3 hours ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

3 hours ago