போதிதர்மருக்கு மணிமண்டபம்.! கோரிக்கை வைத்த திமுக எம்.எல்.ஏ.!

DMK MLA Ezhilarasan say about Bodhidharma

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு கடந்த திங்கள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி 2024-2025ஆம்  ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இதனை அடுத்து இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூடியது. அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.  அப்போது, அந்தந்த துறை அமைச்சர்கள் அதற்கான பதிலை அளித்து வந்தனர்.

அப்போது காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் தொகுதி பல்வேறு உலக தத்துவ அறிஞர்களை ஈர்த்தது. பல்வேறு அறிஞர்களை உருவாக்கியது. பௌத்த மதம், சமண மதம், சைவ மதம், வைணவ மதம் என பல்வேறு மதங்களை கொண்டுள்ளது.

கருணாநிதி நினைவிடம் – வரும் 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

1300ஆம் ஆண்டு இங்கு வாழ்ந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் பேரரசன் சிம்மவர்மனின் 3வது மகன் போதிதர்மன், வளர்ந்து பௌத்த மதம் மீது ஈர்ப்பு கொண்டு அதனை உலகம் முழுக்க பரப்புவதற்கு சீனாவிற்கு சென்றார். அங்கு அவர் ஆரம்பித்த சௌலின் மடாலயம் 16 நூற்றாண்டுகள் கடந்து இன்னும் செயல்பட்டு வருகிறது.

உலகமே போற்றும் தத்துவ சித்தாந்தத்தை கொண்ட போதிதர்மருக்கு அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் ஒரு மணிமண்டபம் கட்ட வேண்டும் என காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் கூறிய தமிழ்வளர்ச்சி, செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மணிமண்டபம் என தனியாக யாருக்கும் அமைப்பதில்லை. தலைவர்கள் பெயரில் பொதுவான அரங்குகளாக அமைக்கப்படுகின்றன. அந்த அரங்குகள் பல்வேறு சமயம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதலால், உறுப்பினர் கேட்ட கோரிக்கையை எழுத்துபூர்வமாக கடிதம் எழுதி கொடுத்தால் அதனை முதல்வர் அனுமதி பெற்று தமிழக நிதிநிலை கருத்தில் கொண்டு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்