திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியை சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேலு என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமண வேலு அவர்களின் சகோதரர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் உருட்டுக்கட்டையால் தாக்கி பிரச்சினைகள் எழுந்துள்ளது.
இதில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த நியாய கேடான கொலைக்கு நியாயம் கேட்டு செல்வம் அவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்நிலையில், தூத்துக்குடி திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணனும் இவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இவர்களுடன் இணைந்து அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேலு வுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். நான்காவது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் நேற்று நள்ளிரவில் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் சிலர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அந்த காரை அவர்கள் சேதபடுத்தக்கூடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…