திமுக அமைச்சர்களின் பேச்சுக்களை தனி படமாகவே எடுக்கலாம் – ஜெயக்குமார்
திமுக அமைச்சர்களின் பேச்சை வைத்து தனி படமாக எடுக்கலாம் என ஜெயக்குமார் விமர்சனம்.
நகைச்சுவை நடிகர் போண்டாமணி, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை முடிந்த நிலையில், சிகிச்சை முடிந்து போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து, அதிமுக சார்பில் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக அமைச்சர்களின் பேச்சை வைத்து தனி படமாக எடுக்கலாம் என்று விமர்சித்துள்ளார்.