இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!

dmk ministers

வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மறுபக்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி மேயர், ஆணையர், அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதா? அல்லது இல்லையா என்பது குறித்து திமுக அமைச்சர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் பேசினர்.

அப்போது, அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, நேற்று இரவு முதல் முதலமைச்சர் தூங்காமல் செல்போனில் எங்களை இயக்கியபடி இருந்தார். எங்கெல்லாம் நீர்த்தேக்கம் என தகவல் வந்ததோ அங்கு செல்ல எங்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்த போதிலும், பெரிய அளவில் மழைநீர் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரும் உடனுக்குடன் அகற்றப்பட்டது. இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் 6,000 கன அடி நீர் திறந்தபோதும் பாதிப்பில்லை எனவும் கூறினார்.

சென்னையில் மழைநீர் தேங்குவது இதனால் தான்.! மாநகராட்சி விளக்கம்.!

அடையாறு கரையோரம் உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் கரை பலப்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழை நீர் வேகமாக வடிந்து வருகிறது. மாம்பலம் கால்வாயில் பிரச்னையை சரி செய்வதற்கு செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

மேலும், பாதாள சாக்கடை அமைப்புகளை சரிசெய்து, உடனுக்குடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 800 கிமீ அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதால் தண்ணீர் வேகமாக செல்கிறது என்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி திறந்து விட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்