அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சர்வதேச முதியோர் தினம் இன்று. முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக, அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், திமுக ஜனநாயகக் கட்சி இல்லை, ஜமீன் கட்சியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும். ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும், இதுவொரு ஏமாற்று வேலை, அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கே சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…