யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!
அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரின் புகைப்படத்துடன் திமுகவினர் சட்டமன்றம் வந்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘இவன்தான் அந்த சார்’ என அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சதீஷ் படத்துடன் வருகை தந்துள்ளனர். எனினும், சட்டப்பேரவைக்குள் செல்வதற்கு முன்பு, கோஷமிட்ட அவர்கள் இந்த போஸ்டரை அவைக்குள் எடுத்துச்செல்லவில்லை.
தொடர்ந்து 3 நாட்களாக தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அதிமுகவினர், அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த சார்’ என்ற பதாகை மற்றும் சட்டையில் பேஜ்ஜூடன் வருகை தந்த நிலையில், அதிமுகவுக்கு பதிலடியாக திமுக ‘இவன் தான் அந்த சார்’ பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை பாதுகாத்து, தப்பிக்க முயற்சித்த அதிமுக பிரமுகர் சுதாகர் கைதானது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அதிமுகவினர் இன்று “யார் அந்த சார்” என்கிற வாசகம் அடங்கிய பேட்ஜ் மட்டும் அணிந்து, வழக்கம் போல வெள்ளை நிற சட்டையுடன் சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.