முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம்.! அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.!

Tamilnadu CM MK Stalin

திமுக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி திமுகவின் பல்வேறு அணியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞரின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு ஆலோசனை நடத்தப்பட உள்ளது எனவும், முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி , சென்னையில் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக முக்கிய நிர்வாகிகள், திமுக பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டத்திற்கு அடுத்த நாளான, வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி திமுக இளைஞரணி, திமுக மருத்துவர்கள் அணி, திமுக மாணவரணி ஆகிய அணியினர் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்