திமுக உட்கட்சி தேர்தல் விவகாரம்… இன்று கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்… அனல் பறக்கும் அண்ணா அறிவாலயம்…

Default Image

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின்  தலைமை அறிவித்தது. இந்த தேர்தலில்  கிளை முதல், பேரூராட்சி , ஒன்றியம் , நகரம் மற்றும்  மாநகரம் வாரியாக உட்கட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது . இதனை தொடர்ந்து இதேபோல், மாவட்ட , தலைமை , பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க  தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில், முதல் கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூராட்சி , ஒன்றியம், கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்றும். இதன் பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  இன்று (பிப்ரவரி 17-ம் தேதி) இதற்க்காக திராவிட முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திராவிட முன்னேற்ற கழக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று  மாலை சரியாக 5 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த  கூட்டத்தில்  உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School