திமுக +மதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை!!

Published by
Venu
  • திமுக +மதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று  நடைபெற்றது.
  • தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இருந்தது என்று மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று  மதிமுக  தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.மதிமுக சார்பில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி கலந்து கொண்டார்.

இதன் பின்னர் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி கூறுகையில்,பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இருந்தது.அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இருக்கும். இரண்டு கட்சிகளின் தலைமையும் இறுதி முடிவை எட்டும் என்று மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

38 minutes ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

44 minutes ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

59 minutes ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

1 hour ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

2 hours ago

பாலியல் வழக்கு விசாரணை சந்தேகங்களை எழுப்புகிறது! அண்ணாமலை பதிவு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago