திமுக + மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள்….!!
- பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையில் பாஜக + பாமக கூட்டணி அமைத்துள்ளனர்.
- திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதியில் போட்டியிட விருப்புவதாக தெரிகின்றது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி உடன்பாடு முடிவாக இருக்கின்றது அதை தொடர்ந்து தோழமை கட்சிகளான VCK + CPI + CPM + MMK ஆகியவை தங்களுக்கான தொகுதிகளை கேட்க இருக்கின்றார்கள்.
அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோயம்பூத்தூர் , கன்னியாகுமரி மதுரை என மூன்று விருப்ப தொகுதிகளில் ஏதேனும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.