திமுக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம்.
கடந்த சில நாட்களாக திமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெயர் பட்டியலை அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது, திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செய்தித் தொடர்பு இணை செயலாளர்களாக தமிழன் பிரசன்னா, சிவ.ஜெயராஜ், கவிஞர் சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக செய்தித் தொடர்பு துணை செயலாளர்கள் சையத் ஹபீஸ் மற்றும் சித்திக் ஆகியோரை நியமனம் செய்து திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுக செய்தித் தொடர்பு துணை தலைவர்களாக பிடி அரசகுமார், ஆண்டாள் பிரியதர்சினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக வெளியிட்டு செயலாளர்களாக திருச்சி என் செல்வேந்திரன், விடுதலை விரும்பி நியமித்துள்ளனர்.
சட்டத்திருத்த திருத்த குழு செயலாளர் வழக்கறிஞர் கிரிராஜனும், தீர்மானக்குழு தலைவர் கவிஞர் தமிழ்தாசன், தீர்மானக்குழு செயலாளர்களாக மீ.அ.வைத்தியலிங்கம், எம்எஸ் விசுவநாதன், அக்ரி கேபிடி கணேஷ், திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவராக அறந்தாங்கி இராசன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர்களாக பொங்கலூர் நா.பழனிசாமி, இ.ஏ.பி.சிவாஜி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக வாகை சந்திரசேகர், துணை தலைவர்களாக தமிழச்சி தங்கபாண்டியன், எம்ஆர்ஆர் வாசு விக்ரம், பேரவை செயலாளர்களாக உமாபதி, அர.திராவிடம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைமை கழக தேர்தல் பணிக்குழு தலைவர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன், ப.ரங்கநாதன் மற்றும் திமுக விவசாய தொழிலாளர் அணி தலைவராக உ.மதிவாணன் நியமிக்கப்பட்டு உள்ளார். துணை தலைவர்களாக பிஎன்பி சந்திரசேகரன், த.சந்திரசேகரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…