திமுக + விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள்….!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தலைமையில் பாஜக + பாமக கூட்டணி அமைத்துள்ளனர்.
- திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி 2 தொகுதியில் போட்டியிட விருப்புவதாக தெரிகின்றது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இவர்களுக்கான தொகுதி பங்கிடும் இறுதி செய்யப்பட்டு விட்டது.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி உடன்பாடு முடிவாக இருக்கின்றது அதை தொடர்ந்து தோழமை கட்சிகளான VCK + CPI + CPM + MMK ஆகியவை தங்களுக்கான தொகுதிகளை கேட்க இருக்கின்றார்கள்.
அந்த வகையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் காஞ்சிபுரம் விழுப்புரம் என மூன்று விருப்ப தொகுதிகளில் ஏதேனும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024![rain pradeep john](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/rain-pradeep-john.webp)
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024![africa cyclone](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/africa-cyclone-1.webp)
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024![chennai rains](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/chennai-rains-2.webp)