பாடபுத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதி பெயர்களை நீக்குகிற முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இந்நிலையில்,பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசு ஒரு சமூக நீதி அரசு. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளில் இயங்குகின்ற அரசு.
எனவே சாதியின் பெயரால் உள்ள பாகுபாடுகளை களைவதற்கு அனைத்து தளங்களிலும் முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், பாடபுத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதி பெயர்களை நீக்குகிற முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நெஞ்சார பாராட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…