தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் :5 இடங்களில் திமுக முன்னிலை..!
மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலின் தபால் வாக்குகலும் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 22 தொகுதிகளில் திமுக 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன் படி திருவாரூர், தஞ்சை, ஆம்பூர், திருப்போரூர், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.இதே போல் மக்களவை தேர்தலிலும் திமுக 31 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது