உகாதி புத்தாண்டையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!
தெலுங்கு – கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டான உகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உகாதி பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு – கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள்.
திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு – கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள்!
அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம். pic.twitter.com/Vzw2cnv8MO
— M.K.Stalin (@mkstalin) April 13, 2021
அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம் என தெரிவித்துள்ளார்.