‘விபத்தில்’ முதல்வரான எடப்பாடி பழனிசாமி..! எடுபிடி ஆட்சி..! – திமுக தலைவர் பிரச்சார உரை.
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் வருகின்ற 21-ந் தேதி (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி வி.நாராயணன்(நாங்குநேரி) மற்றும் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனும்(விக்கிரவாண்டி), தி.மு.க சார்பில் நா.புகழேந்தி(விக்கிரவாண்டி) மற்றும் ரூபி மனோகரன்(நாங்குநேரி), சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றனர்.
வரும் 19ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவதால் அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பிரசாத்தில் பன்னீர்செல்வம், பழனிச்சாமி, ஸ்டாலின் மற்றும் சீமான் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று விக்கிரவாண்டி பிராசத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்றைய தமிழகத்தில் எடுபிடி ஆட்சி நடக்கிறது எனவும் ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைந்த பிறகு ‘விபத்தில்’ முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிஜேபியின் அடிமையாக செயல்படுகிறார் எனவும் பரப்புரையாற்றி உள்ளார்.