பொதுமக்களுக்கு ரூ.5000 மற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.5000 வழங்க வேண்டும்… திமுக தலைவர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்…

Published by
Kaliraj

அப்பாவி மக்களின் உயிரை குடிக்கும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்புப் பணிக்கு  முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, அவர்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், அதிமுக அரசைப் பொறுத்தவரை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் 1000 ரூபாய்’, ‘கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய்’ என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகுந்த  ஏமாற்றமளிக்கிறது என்றும், அவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்னைகளை இந்த அரசு சரியான முறையில் அணுகவில்லை.ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கொரோனா நோயை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசின் ‘தனிமைப்படுத்துதல்’ முயற்சி வெற்றி பெற அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 5000 நிதியுதவியாவது  வழங்கிட வேண்டும் என்றும்,  அதை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து  கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், துப்பரவு பணியாளர்கள்,  144 தடையுத்தரவை அமல்படுத்தும் சீர்மிகு காவல்துறையினர் ஆகியோருக்கு தலா  5000 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்வதுடன், ‘ஊரடங்கு பிறப்பித்து விட்டோம். எல்லாம் முடிந்து விட்டது’ என்று அமைதியாக இருக்காமல், மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் தாமதமின்றி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கொரோனா நோய்த் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அதிமுக அரசு உருவாக்கிட வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

3 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

4 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

5 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

7 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

8 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

8 hours ago