தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
தமிழக மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் ரிஷி ஜோஸ்வா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் வெளி மாநிலங்களில் உயர்க்கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.