கொரோனாவால் உயிரிழந்த சுப்பிரமணியன் மறைவுக்கு மு.க ஸ்டாலின் இரங்கல்.!
கொரோனா பாதிப்பால் சுப்பிரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல்.
புதுச்சேரி மாநிலம் மக்கள் நீதி மையம் தலைவர் சுப்பிரமணியன் என்பவர் கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் அவர்கள் திடீரென்று செய்தியறிந்து மிகுந்த மறைவெய்தினார் என்ற வேதனைப்பட்டேன். அவரது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. சுப்பிரமணியன், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் தலைவராக இருந்தாலும், புதுச்சேரி மாநில தி.மு.க. அமைப்பாளராக இருந்து முன்பு கட்சிப் பணியாற்றி கழக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்றவர் என்பதை நானறிவேன். கொரோனா நோய்த் தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது புதுச்சேரி மக்களுக்குப் பேரிழப்பு
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மக்கள் நீதி மய்யத் தலைவர் சகோதரர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று அனைவரையும் இந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
‘புதுச்சேரி மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் அவர்கள் மறைவையொட்டி,
கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி’#DMK #MKStalin pic.twitter.com/SZ3ZOhXV3y— DMK (@arivalayam) September 3, 2020
உயிரிழந்த சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.