உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் முக ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், திருச்சி தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த லட்சுமணன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன் இவரின் மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடப்படுகிறது. நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், சட்ட ஆணைய தலைவராகவும், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இருந்தவர். மேலும், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயரடைந்தேன். உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது உட்பட புகழ்மிக்க பல பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியவர் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…