பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்- ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால்

Published by
Venu

பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பாமகநிறுவனர் ராமதாஸுக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து தனது ட்விட்டர் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.அதில்,பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறன் &வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாமக நிறுவனர் ராமதாசு  தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவரது பதிவில்,பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல… பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஆஹா…. அற்புதம்… அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்று தெரிவித்தார்.

தற்போது இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் ,மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை!நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று பதிவிட்டுள்ளார்.

 

Recent Posts

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

2 minutes ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

1 hour ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

2 hours ago

விகடன் இணையதள தடை நீக்கம்! ஆனால்.? சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…

2 hours ago

நீங்க அமெரிக்காவுக்குள் வரவே கூடாது! பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் வைத்த ‘செக்’?

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…

2 hours ago

“நான் என்ன தீவிரவாதியா?” சீரிய தமிழிசை! கைது செய்த போலீசார்!

சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…

3 hours ago