முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை.!
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக திகழ்ந்த திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக தலைவர் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்படி திமுக தலைவர்கள் முரசொலி மாறன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
‘தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக திகழ்ந்த திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக தலைவர் @mkstalin அவர்கள் இன்று காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.#DMK #MKStalin pic.twitter.com/YiS7YL7wZ6
— DMK (@arivalayam) August 17, 2020