இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார், உடலநலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த அக்.13-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி அவர்கள் கண்ணீர் மல்க நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இரங்கல் தெரிவித்த நிலையில், இன்று முதல்வரின் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து, திமுக தலைவர் ஆறுதல் கூற உள்ளார்.