இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்….!
திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர், மன்னார்க்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் ஆதரித்து இன்று பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று மு.க.ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின், கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூர் தெற்கு ரத வீதியில், திருவாரூர், மன்னார்க்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும், திமுக வேட்பாளர்கள் ஆதரித்து இன்று பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.