“இது தமிழக அரசா, இல்லை சமஸ்கிருத அரசா “- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
12 ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி பழமையை மாற்றி இருப்பதை குறிப்பிட்டு இது தமிழக அரசா இல்லை சமஸ்கிருத அரசா என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், எப்படி சகிப்பது இந்த கொடுமையை? தமிழ் மொழி 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம் அனால், சமஸ்கிருதம் மொழி 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் பன்னிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகம் என்று கூறியுள்ளார்.
மேலும், காவியை பூசிக்கொள்ளும் அரசிடம் இத தானே எதிர்பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.