எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது 100 வது பிறந்த நாள் முதல் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்தது.
எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசு எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகிறது.
இதேபோல் சென்னையில் வருகின்ற 30-ந்தேதி நிறைவு பெற இருக்கிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும்படி பிரமாண்ட ஏற்பாட்டை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கி நடத்துகிறார்.மேலும் அதிமுகவை சார்ந்த அனைத்து அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கான அழைப்பிதழ்களில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றது.
வாழ்த்துரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளரும் ,ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிமுகவிற்கு முக்கிய எதிரிகளாக கருதப்படும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அழைப்பு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை நாங்கள் கொடுத்து வருகிறோம்.2011-16 ஆண்டுகளில் நடந்த எந்த அரசு விழாக்களின் அழைப்பிதழ்களிலும் மாற்று கட்சி எம்.எல்.ஏக்களின் பெயர்கள் இடம்பெற்றதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…