கஷ்டமே தெரியாத ஒரு தலைவர் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – முதல்வர் பழனிசாமி
கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் மகளிர் சுய உதவி குழுவுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசு அதிமுக அரசு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் உங்களைப்போல ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் வாழ்கிறவன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே மக்களின் துன்பங்கள், பிரச்சினைகளை நன்கு அறிந்தவன். எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்து நாங்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறோம்.
ஆனால் ஸ்டாலின் அப்படி அல்ல. அவர் முதல்வராக இருந்தார். திமுக தலைவராக இருந்தார். எம்எல்ஏ சீட் கொடுத்தார். எம்எல்ஏ ஆனார். எனவே அவருக்கு, மக்களுடைய கஷ்டங்கள் என்ன என்று தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.