திமுக தலைவர் நடிகரும் இல்லை, அரசியல்வாதியும் இல்லை – ராதாரவி விமர்சனம்.!

சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, இதுநாள் வரை திராவிடத்தை சுவாசித்த நான் பா.ஜ.க மூலமாக தேசியத்தைச் சுவாசிக்க வந்திருக்கிறேன் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிஏஏ படித்துப் பார்த்தால் தெரியும். ஆனால் அவர் புரட்டிப் பார்த்தால் எப்படி தெரியும். அவர் நடிகரும் இல்லை, அரசியல்வாதியும் இல்லை என விமர்சித்தார். தி.மு.கவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நான் நயன்தாராவைப் பற்றி பேசியதற்காக என்னை தூக்கி விட்டார்களாம் என குறிப்பிட்டார்.
மேலும் பல நடிகர்கள் பாஜகவில் இணைய உள்ளனர் என்றும் நடிகர் கார்த்திக்கை பாஜகவில் சேர அழைத்துள்ளேன் என ராதாரவி தெரிவித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பாஜக துணையுடன் தான் முதல்வராக முடியும் என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் என்ற கொரோனாவுக்கு மருந்து கொடுக்க தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் உணர்வாளர்கள் நிரம்பியிருக்கின்றனர். எங்கிருந்தாலும் இந்துக்கள் என்ற எண்ணத்துடன் வாக்களியுங்கள். இந்த நாடு இந்து நாடாக வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025