தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டே கிடையாது.. துரைமுருகன் மரண கலாய்.. கூட்டணியை முறித்தாலும் கவலையில்லை..

- திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இடையே அவ்வபோது உரசல்களிருந்த போதிலும் வெளியே காட்டிக்கொள்வதில்லை.
- தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
தற்போது இருகட்சியினரும் மாறி மாறி குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அறிக்கை மேலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.மேலும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது எனவும், அதனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று துரைமுருகன் கருத்து தெரிவித்தார். திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் போனால் போகட்டும் என்று காட்பாடியில் துரைமுருகன் கூறினார். இந்த பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பல திருப்பங்களை ஏற்படுத்தும் என கருதுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025