மே.வங்க முதல்வர் மம்தாவுக்கே டஃப் கொடுக்கும் திமுக வின் கனிமொழி.. உடையில் மாற்றம் செய்து அதிரடி..
- திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழியின்தற்போது திடீர் என தனது உடையில் மாற்றம் தான் தற்போது அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.
- இவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல் மாறும் கனிமொழி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு.
அதாவது சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று தொடர் இசை முழக்க போராட்டம் என்ற போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டத்தின் படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதில், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு படமும், அவர் மேடையில் பேசுகிற மற்றொரு படமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளார். தற்போது இந்த படங்கள் தான் திமுக வட்டாரங்களில் தற்போது பரபரப்பான பேசு பொருளாக உள்ளது. இவர் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை போல உடை, சிகை அலங்காரம் செய்தது போல் இருக்கிறார் கனிமொழி என்று அவர்களது கழக உடன்பிறப்புகள் பேசிக்கொள்கின்றனர்.