பல்துறை திறமையாளரும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் மார்பளவு வெங்கல சிலையை சைதாப்பேட்டை பஜார் தெருவில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அருகே திமுக தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.மேலும் இவர், மாணவர்களுக்கான இலவச கணினி பயிற்சி மையத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக பிரதிநிதிகள்,உடன்பிறப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘ தலைவர் கருணாநிதியின் உழைப்பு அவர் ஆற்றிய பணிகளை எடுத்து சொல்ல அவரது சிலைகளை அனைத்து இடங்களிலும் திறந்து வைக்கிறோம் என்றும், மேலும் அவர், இன்றளவும் திமுகவை வழிநடத்துவது கலைஞர்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருக்கும் கட்சிதான் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை பெறும் என்ற வரலாறு இன்று மாறியுள்ளது. அதுபோன்று 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று பேசினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…