திமுக தலைவரின் தவறான டுவிட்டர் பதிவு… ஒரு மணி நேரத்தில் நீக்கம்… இதுபோன்ற பதிவு தேவையற்ற பீதியை உண்டாக்கும் என கருத்து…
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரண்மாக தமிழகத்தில், இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்’ என்ற தவறான தகவலை, திராவிட முன்னேற்ற கழகத் தலைவர், ஸ்டாலின், ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்ட, ஒரு மணி நேரத்தில் நீக்கினார்.அவர், ‘டுவிட்டர்’ பக்கத்தில், நேற்று, தமிழகத்தில், கொரோனாவால், ஒன்பது பேர் உயிரிழப்பு; 8,000 ஆயிரம் பேருக்கு பாதிப்பு;
சென்னை உள்ளிட்ட, மூன்று மாவட்டங்களைத் தனிமைப்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.இவ்வாறு, அவர் கூறியிருந்தார். ஆனால் தமிழகத்தில், ஒன்பது பேர் கொரொனா வைரஸ் பாதிப்பால் இறக்கவில்லை; இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தான், ஒன்பது பேர். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவலை தந்ததால், சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின் தன் பதிவை, ஒரு மணி நேரத்தில் நீக்கினார். இதுபோன்ற தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றம் மற்றும் பீதியை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.