கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏ ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் ஸ்டாலின் அறிவிப்பு…
கொரோனா வைரஸ் பரவாமல் அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில், திராவிட முன்னேற்ற கழக எம்.பி.,க்கள், மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை, தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவர்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க,தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால், தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ தி.மு.க., முடிவு செய்துள்ளது. எனவே, தி.மு.க., – எம்.எல்.ஏ., க்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவர் என்றும், மேலும், தமிழக அரசும் உடனே போதிய நிதி ஒதுக்கி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன் வர வேண்டும்எனவும், தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும், இந்த மனித நேய முயற்சியில், தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, சட்டசபையில் நான் வலியுறுத்தியதை மீண்டும் தற்போது வலியுறுத்துகிறேன். கொரோனா வைரஸ் தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வெளியிடும், சுய ஊரடங்கு உள்ளிட்ட, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், சுய சுகாதாரத்தை கடைப்பிடித்தும், கொரோனா தொற்று நோய் பரவலை முழுமையாக தடுத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.