தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கு கண்டிக்கத்தக்கது என எஸ்பி வேலுமணி ட்வீட்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வெள்ளலூரில் மறைமுக தேர்தலின்போது அதிமுக – திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
மறைமுக தேர்தலின்போது இந்த கடும் மோதலில் சிலருக்கு மண்டை உடைப்பு, சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மோதலில் ஈடுபட்ட சிலரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளலூர் மறைமுக தேர்தல் மோதல் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 8 வார்டுகளில் மக்களின் அமோக ஆதரவோடு அதிமுக வெற்றி பெற்றது. பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றால், அதில் அதிமுகவே வெற்றி பெரும்.
அதிமுகவின் இந்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, தேர்தலை நிறுத்த சட்ட விரோதமாக தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் நடைபெறும் வளாகத்தில் திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து, ஜனநாயகத்தை காப்பாற்ற முயன்ற அதிமுகவினர் கைது செய்யப்பட்டிருக்கிறர்கள். அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
வெள்ளலூர் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அராஜக போக்கை பயன்படுத்தி தேர்தலை மீண்டும் நிறுத்த திமுக முயற்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் நியாயமாக செயல்பட்டு தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா : ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் சதீஸ் தவான் 2வது தளத்தில் 'பிஎஸ்எல்வி…
சென்னை: புத்தாண்டை ஒட்டி சென்னையில் நாளை மாலை முதல் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மெரினா, எலியட்ஸ் சாலைகளில் போக்குவரத்துக்கு…
சென்னை: திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாம் தமிழர் கட்சியினர் சிலர் வலைதளங்களில்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, தவெக தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை,…
சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார்.…
சென்னை : GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன்…