“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!
தேர்தல் ஆதாயத்திற்காக கச்சத்தீவு தனித்தீர்மானம் இயற்றிய, திமுகவின் அந்தர்பல்டி அரசியலை தவெக கண்டிக்கிறது என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கைப் பயணம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை செல்லும் பிரதமர் மோடி, ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒற்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் வாயிலாக, “1974ல் கச்சத்தீவு கைவிட்டு போக காரணம், ஆட்சி அதிகார பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியாக இருந்த திமுகவே. கபட நாடகம் மட்டுமே, வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மாயாஜால வித்தை என்றும் தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக கச்சத்தீவு தனித்தீர்மானம் இயற்றிய, திமுகவின் அந்தர்பல்டி அரசியலை தவெக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை முழுவதுமாக பார்க்க பின்வருமாறு….
— TVK Vijay (@TVKVijayHQ) April 4, 2025