இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது திமுக தான் – டிடிவி தினகரன்

நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு எத்தனை பிரச்னைகளை சந்திக்கிறது, அத்தனைக்கும் பிள்ளையார் சுழிபோட்டது திமுக தான் என்று குற்றசாட்டியுள்ளார்.
காவிரி, முல்லை பெரியார், கச்சத்தீவு, நீட் தேர்வு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக தான் காரணம் என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா இருந்த வரை மக்கள் விரும்பாத திட்டங்களை தடுத்து நிறுத்தினார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் கடனில் உள்ளதால் நேர்மையான, வெளிப்படையான ஆட்சியை கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் குக்கர் சின்னம் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.